இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
புவனேஸ்வரி விவகாரத்தில் வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது என்று பிரபல எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். சாமியார் நித்தியானந்தருடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் சங்கம் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தது. நடிகைகளை பாதுகாக்க சட்ட நடவடிக்கை தேவை, அதற்காக எவ்வளவு செலவானாலும் தருகிறேன், என்று சொன்ன சூர்யா உள்ளிட்ட நடிகர்கள், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல பயந்து ஓடி ஒழியும் சூழ்நிலை உருவாகி விட்டது. பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த சத்யராஜ், விவேக் உள்ளிட்டவர்களும் பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஞ்சிதா விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை, என்றார். அதன் பிறகு அளித்த பேட்டியொன்றில், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது. நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது, என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த மவுனத்தை பிரபல எழுத்தாளர் ஞாநி கண்டித்திருக்கிறார். ரஞ்சிதாவுக்கு கடிதம் என்ற பெயரில் பத்திரிகையொன்றில் அவர் எழுதியிருப்பதாவது:-
உங்களுடைய தனிநபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள் விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்து வெளியிடுவதுதான் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.
புவனேஸ்வரி கைதின்போது வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும், நடிக - நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.
சாவித்ரி முதல் கனகா வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும், வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வர வேண்டும். அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஞாநி எழுதியிருக்கிறார்.